மும்பையில் கோலாகலமாக நடைபெறும் கணபதி கொண்டாட்டம்; நாளை நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2026 11:09
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, பிரம்மாண்டமான விசர்ஜன விழா நாளை செப்டம்பர் 25 முடிவடைகிறது
மும்பை முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வீடுகள், குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு ஆரத்தி நடைபெறுவதுடன், சத்யநாராயண பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. மேலும், பக்தர்களுக்காக அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் அலங்காரங்கள், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகளுடன் கணபதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பை நகரமே விநாயகரின் பக்தி முழக்கத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.