காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2021 02:12
காஞ்சிபுரம் : கச்சபேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு, நேற்று, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடை ஞாயிறு விழா நடைபெறும். இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இவ்விழா நடைபெறவில்லை. நடப்பாண்டு விழா நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் தங்கள் உடல் நலம் வேண்டி மண் சட்டியில் மா விளக்கு ஏற்றி தலையில் சுமந்து சென்று சுவாமி தரிசனம் செய்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால் கடை ஞாயிறு விழாவில் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை தங்கள் நேர்த்தி கடன் செலுத்த மாவிளக்குஏற்றி சுமந்து சென்றுதரிசனம் செய்தனர்.இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்ததால் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வாரம் மழை இல்லாததால் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.