முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2021 02:12
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி டிச.5ம் தேதி மாலை 6:00 மணி முதல் கால யாகபூஜைகளை கோயில் சிவாச்சாரியார்கள் துவக்கினர். இன்று இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த புனித நீரைக் கொண்டு லிங்க வடிவான சொக்கநாதருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். விழாவில் கோயில் நிர்வாகிகள், கிராமத்தார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.