பதிவு செய்த நாள்
06
டிச
2021
02:12
ஈரோடு: ஈரோட்டில், ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள, புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபர் கிளாடியஸ், கொடியேற்றி துவக்கி வைத்தார். இதையொட்டி நற்கருணை வழிபாடு நடந்தது. 8ம் தேதி, ?ம் தேதி, ??ம் தேதி மாலையில், நவநாள் திருப்பலி நடக்கிறது. 12ம் தேதி தேர்த்திருவிழாவை ஒட்டி, ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதையடுத்து காலை, ?:00 மணிக்கும், மாலை, 5:30 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. மூன்று திருப்பலி முடிந்ததும், ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும். இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, தேர்த்திருவிழா எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். 12ம் தேதி தேர்திருவிழா அன்று மாலையில் தேர் வீதி ஊர்வலம் நடக்காது. அதற்கு பதிலாக ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும் என்றார்.