திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்ட இந்திர விமானத்தை அ.தி.மு.க, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.
நெல்லையப்பர் கோயில் ஆனி தேர்த்திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 5ம் நாளன்று காந்திமதி அம்பாள் இந்திர விமானத்தில் வீதி உலா செல்வது வழக்கம். இந்த வாகனம் பழுதடைந்ததை அறிந்த அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா சுமார் ரூ.9லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்துள்ள 1.5 டன் எடையுள்ள இந்திர விமானத்தை வீதி உலாவாக எடுத்து வந்து கோயில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், அ.தி.மு.க, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.