பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா, சாட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . கவுமாரியம்மன் ஆனித் திருவிழா சட்டுதல் நிகழ்ச்சியில், கோயிலில் கம்பம் நடுவிழா நடந்தது. வடகரை வரதப்பர் தெருவில் பூஜாரி காமுத்துரை தலையில் கரகம் எடுத்து, முளைப்பாரியுடன் தென்கரை கவுமாரியம்மன் கோயிலுக்கு வந்தார். செயல்அலுவலர் சுதா தலைமை வகித்தார். கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் முன் பகுதியில் கம்பம் நடப்பட்டது. பூஜாரிகள் துரைப்பாண்டி, காமுத்துரை, ரமேஷ் உள்ளிட்டோர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.திருவிழா ஜூலை 9 முதல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடக் கும் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, அன்னம், பூபல்லாக்கு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.