நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள சித்தர் கோவிலுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமிகள் கோவிலுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 4ம் தேதி காலை 8:00 மணிக்கு கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை நடந்தது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு பிரவேசபலி, அங்குரார்பணம், கலாகர்ஷணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு யாக சாலை பிரவேசம் நடந்தது. 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 6ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. 9:00 மணிக்கு மகா தீபாராதனை, கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:00 மணிக்கு கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.