பதிவு செய்த நாள்
07
டிச
2021
03:12
சூலூர்: குமாரபாளையம் பெரிய வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன், மாகாளியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இங்குள்ள பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று மாலை, 3:00 மணிக்கு, சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் செண்டை மேளத்துடன் பக்தர்கள் கத்தி போடுதல், முளைப்பாலிகை ஊர்வலம் நடக்க உள்ளது. நாளை( 8.12.21) காலை, 6:30 மணிக்கு ஐந்தாம் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடக்கிறது. 9:30 மணிக்கு, கொடிமரம், விமானத்தை தொடர்ந்து, மூலவர் பெரிய வலம்புரி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.