புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் கோவில் புனரமைப்பு பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெல்லித்தோப்பு பெரியபாளையத்தம்மன் கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இப்பணி துவக்க விழா நேரு எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகானந்தம், திருப்பணி குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, உருளையன்பேட்டை ராஜா நகர் ராஜகாளி அம்மன் கோவில் ராஜகோபுர முன் மண்டபம் வாசக்கால் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.