ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் குதிரை இறப்பு; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2021 04:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 6 வயது குதிரை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தது. பக்தர்கள். கோவில் பட்டர்கள், ஊழியர்கள் மனவேதனையடைந்தனர்.
இக்கோயிலில் உள்ள யானை, குதிரை, பசுமாடு தினமும் காலையில் விஸ்வரூப பூஜையின்போது பங்கேற்பது வழக்கம். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறும் போது இவற்றிடம் பக்தர்கள் ஆசி பெறுவார்கள். இந்நிலையில் ஆறு வயதான கோயில் குதிரைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கால்நடை டாக்டர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 7:20 மணிக்கு குதிரை இறந்து விட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டுவரப்பட்ட குதிரை, கோயில் மத சம்பிரதாயங்களின் படி அடக்கம் செய்யப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள், பக்தர்கள் கண்ணீர் மல்க தங்களின் அஞ்சலியை குதிரைக்கு செலுத்தினர்.