பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
திருவேங்கடம் : சுப்புலாபுரம் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலை மேளவாத்தியம், கணபதி, ருத்ர, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடந்தது. இரண்டாம் நாள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் தலைமையில் பஞ்., தலைவர் சக்திவேல் முன்னிலையில் வருஷாபிஷேக விழா நடந்தது. அன்று காலை மேள வாத்தியம், கணபதி, ருத்ர, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. பின் கணபதி, துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி, முருகப்பெருமான், தட்சணாமூர்த்தி மற்றும் உடையநாயகி அம்பிகைக்கு அபிஷேகம், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக அலங்கார தீபாராதனை, அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சிவகாமி கணேச அய்யர் செய்திருந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் அக்தார் மற்றும் நிர்வாகி சுப்பையா, விழாக் குழுவினர், இந்து செங்குந்தர் பொதுமக்கள் செய்திருந்தனர்.