பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
தென்காசி : வைராவிகுளம் சுந்தர விநாயகர் நாககன்னி அம்பாள் கோயிலில் இன்று (5ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. வைராவிகுளம் சுந்தர விநாயகர் நாககன்னி அம்பாள் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீர்த்த சங்கரஹணம், பிரவேச பலி, கடஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, இரவு யந்திரம் வைத்து மருந்து சாத்துதல் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று (5ம் தேதி) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் காலை யாகசாலை பூஜை, வேதபாராயணம், மகா தீபாராதனை, பூர்ணாகுதி, ஸ்பரிஷாகுதி, கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 11.30 மணிக்கு விமான அபிஷேகம், 11.40 மணிக்கு சுவாமி அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது