பதிவு செய்த நாள்
12
டிச
2021
09:12
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் மார்கழியை முன்னிட்டு டிச. 16 முதல் ஜன. 13 வரை அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்படும். தினம் காலை 5:30 மணிக்கு திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் நடைபெறும். ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி, கூடாரவல்லி உள்பட அனைத்து திருவிழாக்களும் உள் திருவிழாவாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
* சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் டிச. 16 முதல் ஜன. 14 வரை காலை 5:45 மணிக்கு திருப்பாவை திருவெம்பாவை பாராயணம், காலை 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள், ஜன. 2 அனுமன் ஜெயந்தி, ஜன. 11 ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம், ஜன. 13 வைகுண்ட ஏகாதேசி பூஜைகள், சொர்க்கவாசல் திறப்பு ம் நடைபெறும்.
* மகாலட்சுமி நெசவாளர் காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் டிச. 16முதல் ஜன.14 வரை காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாத சேவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 5 30 மணிக்கு விஸ்வரூப பூஜைகள் நடைபெறும். டிச. 20 ஆருத்ரா தரிசனம், ஜன 2 அனுமன் ஜெயந்தி, ஜன. 11 ஆண்டாள் மாலை மாற்றுதல் வைபவம், ஜன. 13 வைகுண்ட ஏகாதசி பூஜைகள், ஜன. 14 அன்னதானம் நடைபெறும்.