தேவகோட்டை: பெருமாள் கோயில்களில் பெரிய அளவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஒன்று. இந்தாண்டு இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கத்தில் திருவிழா துவங்கி பகல் பத்து இராபத்து என திருவிழா நடந்து வருகிறது. அங்கு டிச.14 ல் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஜன.13 ல் கொண்டாடுகின்றனர். தேவகோட்டை பக்தர்கள் மத்தியில் எந்த தேதி குழப்பம் தொடர்கிறது. இது பற்றி கோதண்டராமர் ஸ்வாமி கோயிலைச் சேர்ந்த பாலாஜி பட்டர் கூறுகையில் , இது போன்று இரு ஏகாதசி கள் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். ஸ்ரீ ரங்கத்தில் திருவிழாவும் நடைபெற உள்ள நிலையில் , தேரோட்டம் நடைபெறும். எனவே டிச. 14. ல் விழா நடக்கிறது. எப்ப விழா என போன் செய்து கேட்கிறார்கள். தேவகோட்டை பகுதியில். 2022 ஜன. 13 ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்றைய தினம் காலை 4:15 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில். சுவாமி எழுந்தருள்வார் . தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். என் கூறினார். 2022 ஜன.2. அனுமார் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.