Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனகதாசர் 534வது ஜெயந்தி விழா: தலையில் ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூர்த்தம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையில் நீரடி காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறந்தார் பிரதமர்
எழுத்தின் அளவு:
கங்கையில் நீரடி காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறந்தார் பிரதமர்

பதிவு செய்த நாள்

13 டிச
2021
02:12

வாரணாசி, உத்தர பிரதேசத்தில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.,13) திறந்து வைத்தார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுஉள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இதற்காக இன்று வாரணாசி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக உ.பி., சென்ற அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார். படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து கோவில் வளாகத்தை திறந்து வைத்தார். இன்று மாலை கங்கை ஆரத்தி பூஜையிலும் பிரதமர் பங்கேற்கிறார். வாரணாசியில் இன்றிரவு தங்கும் பிரதமர், பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநில முதல்வர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி வாரணாசி விழாக் கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த "இல்லம் நிறை பூஜையில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்; நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா நடந்தது.நாகையில், விநாயகர் ... மேலும்
 
temple news
 தஞ்சாவூர்; திருப்பனந்தாள் காசி மடத்தின், 22வது அதிபராக சபாபதி தம்பிரான், பீடம் ஏறும் வைபவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கைலாய யாத்திரையின் போது, நடிகர் மாதவனுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடிய போது, கைலாயம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் முடிந்த பின், நேற்று புது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar