கம்பம்: கம்பத்தில் உடையாளி பொம்மையை சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு வளாகத்தில் உள்ள காமுகுல ஒக்கலிகர் (காப்பு) சாவிரி கம்ப பாலலவாரு எம்மேனவரு குல தெய்வம் உடையாளி பொம்மையசnமி மாலைக்கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை முதல யாகசாலை பூஜைகள் நடைபெற்றது காலை 10 மணியளவில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் குடங்களில் எடுத்து செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கூடியிருந்த தானமானக்காரர்கள சுவாமியின் திருப்பெயரை உச்சரித்து கோஷம் எழுப்பினர், பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர், இந்த கும்பாபிஷேகத்தில் கம்பம் மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் ஜெ. தாத்துராஜ், செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.