பழநி: பழநி, முருகன் மலைக்கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயில்களில் தனுர் மாத பூஜை துவங்கியது. பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் தனுர் மாத பூஜைக்காக அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. மார்கழி மாதம் முழுவதும். நிகழ்ச்சிகள் நடை பெறும்.