சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 12:12
சித்தூர்: ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரத்தில் உள்ள சுருட்டுப்பள்ளி சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் இன்று சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. மாலை 6:30 முதல் 7.30 மணி வரை நந்தீஸ்வரருக்கும் வால்மீகிஸ்வர சுவாமிக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி மகா தீபாராதனையை சமர்ப்பித்தனர் .இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர் .கோயிலில் கொரோனா தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இன்று பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர் , சந்தனம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் முனி சேகர் ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.