பழநி: பழநி, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வேல் ரவுண்டானாவில் புதிய வேல் வைக்கப்பட்டது.
பழநி, பஸ் ஸ்டாண்ட் அருகே கிரானைட் கற்களால் வேல் மற்றும் மயில் வடிவங்கள் ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டுள்ளது. வேல் ரவுண்டானாவில் வேல் அமைப்பை டிச.,15 இரவு சேலம் மாவட்டம், தாரமங்கலதை சேர்ந்த முருகேசன் 24, உடைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். "இந்நிலையில் அப்பகுதியில் புதிய வேல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச.17) அதிகாலை நான்கு அடி உயரம் உள்ள கல்லால் ஆன வேல் சிலையை மாசிமலை சிற்பக்கலைக்கூட நாகராஜ் ரவுண்டானாவில் பொருந்தினார். டிஎஸ்பி சத்யராஜ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உட்பட போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். பொதுமக்கள் பலர் வேலுடன் நின்று செல்ஃபி எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.