பதிவு செய்த நாள்
17
டிச
2021
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிரதோஷத்தில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மார்கழி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலிலுள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை சிறப்பு அபிஷேகமும் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.