கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி ஊராட்சி மணியக்காரன்பட்டியில் மந்தை பகவதி அம்மன் கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் விழா நடந்தது. முன்னதாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்ற பக்தர்கள், ஊர் தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபட்டனர். பின்னர் பூக்குழி இறங்கும் பக்தர்களின் பாதங்களில் பால் ஊற்றி பாதபூஜை செய்தனர். ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று திரும்பியவுடன் பூக்குழி இறங்கினர். அதனைத் தொடர்ந்து மந்தை பகவதி அம்மன் கோவில் பூஜாரிகள், முருகபக்தர்கள், ஓம்சக்தி பக்தர்கள், மாரியம்மன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.