காரைக்குடி: காரைக்குடி பருப்பூரணி அருகே 18 படியுடன் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, லெட் சுமிபூஜை, அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு 18 படிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை குருசாமி ஐயப்பாசெல்வராஜ், மற்றும் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பன் சேவா டிரஸ்ட் செய்திருந்தனர்.