ஹிந்துக்கள் புனித யாத்திரை செல்ல நிதியுதவி: தேவநாதன் யாதவ் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2021 04:12
சென்னை : ஹிந்துக்கள் புனித யாத்திரை செல்ல, தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதரர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல உதவித்தொகை வழங்கப்படுகிறது. காசி, மதுரா, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள புனித தலங்களுக்கு சென்றால் தான், பிறவிப் பயனை அடைவர் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. எனவே, ஹிந்துக்கள் காசி, மதுரா உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்ல, தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.