பழநி: பழநியில் அகில பாரத ஐயப்ப தர்ம பிரசார சபா சார்பில் தனியார் மடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ. மாவட்ட தலைவர் கனகராஜ் துவங்கி வைத்தார். இதில் நேற்று (டிச.17) முதல் 2022,ஜன.,10 வரை மூன்று வேளைகளும் ஐயப்ப பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும். அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் சபா தேசியத்தலைவர் ஐயப்பதாஸ், தேசிய பொருளாளர் ஹரிபிரசாத், கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் மது சேத்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.