சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி மகாமாரியம்மன் சித்தர் பீடத்தில் தமிழில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு தொடர் அன்னதானம் நடைபெற்றது. சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை ஊராட்சி வடகாட்டுப்பட்டியில் உள்ள மகாமாரியம்மன் பளிங்கர் சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. காலை கணபதி ஹோமமும் மாலை மகா சக்தியாகவும் நடத்தப்பட்டது. யாக பூஜைகள் தமிழின் நடத்தப்பட்டது. யாக பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கோவை நவசக்தி அம்மன் கலந்துகொண்டு யாக பூஜை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி சிறப்பு சொற்பொழிவு நடத்தினார். பக்தர்களுக்கு அனைவருக்கும் காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.