சென்னை:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், வேத சிவாகம பாடசாலையில், ஐந்து ஆண்டு பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கப்பட்டு உள்ளது. இப்பாடசாலையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 16 வயதிற்குள் இருக்க வேண்டும்.பயிற்சி காலம் ஐந்து ஆண்டுகள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஜனவரி 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, கோவில் அலுவலகத்தில் நேரில் பெறலாம். மேலும், www.hrce.tn.gov.in, www.palanimurugan.hrce.tn.gov.in என்ற கோவில் இணைய தளம் வாயிலாக வும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை இணை கமிஷனர், செயல் அலுவலர், தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் - 624 601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.