தேவகோட்டை: தேவகோட்டையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. கைலாசநாதர் கோயிலிலும் அதிகாலையில் பூஜைகள் நடந்தன. கோட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் காலை 9 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜரை சுவாமி தரிசனம் செய்தனர்.