திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு உற்ஸவம்: பக்தர்களுக்கு எண்ணெய் பிரசாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2021 10:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று துவங்கியது.
கோயிலில் அம்மன் மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. கருமுடி சாத்துப்படி செய்து மூலிகை எண்ணெய் தேய்த்தல், வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், கண்ணாடி பார்த்தல் நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. டிச.,25 வரை இந்நிகழ்ச்சி நடக்கும். இந்நாட்களில் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.