Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகிஸ்தான் ஹிந்து கோயிலில் சுவாமி ... திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு உற்ஸவம்: பக்தர்களுக்கு எண்ணெய் பிரசாதம் திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழா: பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழா: பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

22 டிச
2021
10:12

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜரின் 175வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது. தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 18ம் தேதி, தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 22ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறுது. விழாவில், பல்வேறு சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதற்காக இன்று காலை 9 மணிக்கு திருவையாறில், ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar