சுரண்டை: சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயிலில் 3 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடந்தது. சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை கமிட்டி சார்பில் 32ம் ஆண்டு 3 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9மணிக்கு குற்றாலம் தீர்த்தம் வருதல்,௯மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் 10 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 51 வகை அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு பரிசுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. குற்றாலம், ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீமத் அகிலானந்தசுவாமி தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். டாக்டர் முத்துலட்சுமி முருகையா திருவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அழகுபார்வதி அம்மன் கோயில் பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், தர்மகர்த்தா பூல்பாண்டியன், செயலாளர் மணிக்குட்டி (எ) சுப்பிரமணியன், பொருளாளர் அழகுசுந்தரம் மற்றும் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் சுப்புமாணிக்கவாசகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.