மதுரை : மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம், வள்ளலார் மன்றம் சார்பாக ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் வரதராஜ பெருமாள் கோயிலில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது. வேங்கடராமன் ஆன்மநேயம் குறித்தும், ஜோதி ராமநாதன் திருவடி பேறு குறித்தும் பேசினர். சன்மார்க்க உரை, ஜோதி வழிபாடு நடந்தது. வேங்கட ராமானுஜம், சுந்தரம், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார். அன்னதானம் வழங்கப்பட்டது.