மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்ட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2026 03:02
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட விழாவும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் சோமநாதர் தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிதாக தேர் செய்யும் பணி முடிந்துள்ளதையடுத்து நேற்று காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை முதல் தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிற நிலையில் இன்று புதிதாக செய்யப்பட்ட தேருக்கு முன்பாக நான்கு குதிரைகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தவுடன் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நாளை காலை 9:45 மணிக்கு ரத பிரதிஷ்டையும்,காலை 11:00 மணிக்கு புதிய வைரத்தேர் வெள்ளோட்ட விழாவும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.