ஈரோடு : அனுமன் ஜெயந்தி விழாவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, ஈரோட்டில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு, வ.உ.சி., பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு. அனுமன் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் லட்டு, செந்துாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஜன., 2ல், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருவர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக லட்டுகள் தயாரிக்கும் பணி, செங்குந்தர் சமுதாய மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.