பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம் மேலமாத்துார் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்த வெள்ளையம்மாள் மதுரைவீரன் பொம்மியம்மா வீரபத்திரன் பாப்பாத்தி அம்மன் பச்சை அம்மன் உட்பட 8 கற்சிலைகள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.இது குறித்த புகார்படி குன்னம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.