ஆங்கில புத்தாண்டை வரவேற்று சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2021 05:12
பெரியகுளம்: பெரியகுளம் சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடந்த பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
பெரியகுளம் சீரடி சாய்பாபா கோவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஜன.1 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடந்த பூஜையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.