திருப்பதி :திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்தாண்டு உண்டியல் காணிக்கை 833 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது.உண்டியல் வருமானம் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானமாக கருதப்படுகிறது. அதன்படி கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஏழுமலையான் உண்டியல் வருவாய் பெருமளவில் குறைந்து உள்ளது.வழக்கமாக 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்து வந்த ஆண்டு உண்டியல் வருவாய், இந்தாண்டு 833 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் 1.04 கோடி பக்தர்கள் மட்டுமே இந்தாண்டு ஏழுமலையானை தரிசனம் செய்துஉள்ளனர்; 48.75 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்; 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.