பதிவு செய்த நாள்
01
ஜன
2022
11:01
சென்னை : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், இன்று (ஜன.,1) அதிகாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக, பொது தரிசனம் தவிர, 50 ரூபாய் சிறப்பு வழி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். கடைப்பிடிக்க வேண்டும். சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி ஆகியோர் செய்துள்ளனர். மேலும், வடபழநி ஆண்டவர் கோவிலில் தினசரி 100 நபர்களுக்கும், கிருத்திகை நாட்களில், 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க விருப்பம் உடையோர், கோவில் அலுவலகத்தில் அளித்து உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அலங்காரங்கள்:
* அதிகாலை 4:30 மணி முதல் 12:00 மணி வரை- வெள்ளி நாணய கலச அலங்காரம்
* பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை- தங்க கலச அலங்காரம்
* மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் முருகப் பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.