அனுமனுக்கு ‛சுந்தரன் என்றொரு பெயருண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, சொல்லின் செல்வனான அனுமனுக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் ‛சுந்தர காண்டம் என்னும் பகுதியை உருவாக்கினார். ‛சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் மனக்குழப்பம் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். ‛சுந்தர காண்டத்தை தினம் படித்தால் மருத்துவரால் குணப்படுத்த முடியாத வியாதியும் பறந்தோடும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். கர்ப்பிணிகள் சுந்தரகாண்டம் படித்தால், அனுமன் அருளால் நற்குணங்களுடன் குழந்தை பிறக்கும்.