சித்தூர்: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று (2ம் தேதி) அமாவாசையையொட்டி காளஹஸ்தீஸ்வரரும் ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரங்களில் நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வழிநெடுகிலும் (4 மாட வீதிகளில்) பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீலங்கா எம்.பிசாமி தரிசனம்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஸ்ரீலங்கா நாட்டு எம்.பி.அங்கஜன்.ராமநாதன் சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதம் செய்தனர்.