ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர். சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார். இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால் அனுமனின் வாலாக பார்வதியும் உடன்வந்தாள். அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவர். வாலில் நுனியில் இருந்து, இந்த ‘பொட்டு வைக்கும் பிரார்த்தனையை’ தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து ஒரு மண்டலத்திற்குள் (48 நாள்) பூர்த்தி செய்ய வேண்டும். அப்போது அவல், தேன், பானகம், கடலையை படைத்து வழிபடலாம். இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறும்.