தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரை சங்கீத மும்மூர்த்திகள் என்பர். இவர்களின் காலத்திற்கு முன்பு ‘ஆதி மும்மூர்த்திகள்’ எனப்படும் அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை, முத்துத் தாண்டவர் என்னும் மூவர் இசைக்கலையைப் பரப்பினர். இதில் அருணாசலக் கவிராயரால் பாடப்பட்ட அனுமன் பிள்ளைத்தமிழ், ராம நாடகக் கீர்த்தனை குறிப்பிடத்தக்கவை. ‘ராம நாடகக் கீர்த்தனை’ என்பது ராமனின் வரலாற்றை விவரிக்கும் இசை நாடகநுால். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது அரங்கேற்றம் செய்யப்பட்டது.