விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி காலை 8 மணிக்கு ராகவேந்திரர் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையுடன் விழா துவங்குகிறது. மாலை 4.30 மணிக்கு லட்சுமி சத்யநாராயண பூஜையும், 6 மணிக்கு சுவாமிகளின் அருள் கீர்த்தனை இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் ( 4ம் தேதி) காலை 6 மணிக்கு மங்கள இசையும், 7.30 மணிக்கு ராகவேந்திர சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், வெள்ளிக் கவசம் சாற்றுதலும் நடக்கிறது. தொடர்ந்து கனகசேவை, விளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனையும் நடக்கிறது. இதனையடுத்து 5ம் தேதி மாலை குருஜி ராகவேந்திராச்சார் அருளுரை வழங்குகிறார். இரவு ரதம், பல்லக்கு உற்சவம் நடக்கிறது.