தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் வெளியேறினர். திருச்செந்தூர் லாட்ஜ்களிலும் பக்தர்கள் தங்க அனுமதியில்லை. இதனால் நேற்று திருச்செந்தூர் கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவில் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.