பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 10:01
திண்டுக்கல் : பழநி தைப்பூச திருவிழா ஜன.,12 முதல் ஜன., 21 வரை நடைபெற உள்ளது. இதில் கிழக்கு ரத வீதி பெரிய நாயகி அம்மன் கோயில் மண்டபத்தில் காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அரசின் வழிகாட்டுதல் நெறி முறைப்படி பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை: திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தைப்பூச திருவிழாவில் ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும்.திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள் நடத்தப்படும். திருவிழா நிகழ்வுகள் கோவில் வலைத்தளம், யூடியூப் சேனல் வாயலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.