பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் பாதையை மறைத்து இடையூறு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 03:01
சாணார்பட்டி: பழனி பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்காக நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்ட பாதை ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் தனி பாதை வசதி செய்யப்பட்டும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் ரோட்டில் நடக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இடைஞ்சல் ஏற்படுவதுடன் அடிக்கடி பக்தர்கள் விபத்தில் சிக்கி பலியாவது தொடர்கதையாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் கோபால்பட்டி முதல் திண்டுக்கல் வரை பல இடங்களில் உள்ளது. இந்தப் பாதையில் வாகனங்களை நிறுத்துவது, ரோட்டோர கடைக்காரர்கள் பாதயாத்திரை பக்தர்கள் பாதையை ஆக்கிரமித்து கடை நடத்துவது, மேலும் பாதையின் அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் தேவையற்ற பொருட்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மேலும் தைப்பூச விழா நெருங்குவதால் இந்த நேரத்தில் பக்தர்கள் அதிக அளவில் தொடர்ந்து செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் தொடர் விபத்தில் சிக்குவது தவிர்க்க முடியும்.