பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று அதிகாலை காலை 3 மணி திருமஞ்சனம் சேவையுடன் துவங்கியது. காலை 4 மணி திருப்பாவை சேவித்தல், 5 மணிக்கு வைகுண்ட சொர்க்கவாசல் திறந்தது. வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்தனர். *நாமத் வார் பிரார்த்தனை மையத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.