50 ஆண்டுகளில் மாட்டுப் பொங்கலன்று முதன் முறையாக மூடப்பட்ட நந்தகோபாலன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2022 06:01
கம்பம்:
50 ஆண்டுகளில் முதன முறையாக ஒமைக் கிரான் காரணமாக மாட்டுப்பொங்கலன்று
கம்பம் நந்த கோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு அடைக்கப்பட்டது. வழக்கமான
பூஜை களும் , பட்டத்துக் காளைக்கு அபிஷேக ஆராதனைகளும் வழக்கம் போல்
நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கம்பம் நகரில் மேற்கு
திசையில் அமைந்துள்ளது நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொமு என்று
அழைக்கப்படும் நந்தகோபாலன் கோவில். பசுக்களை தெய்வமாக வணங்கும் இங்கு தெய்வ
விக்கிரங்கள் கிடையாது. இங்குள்ள பட்டத்துக்காளைக்கு அபிஷேக ஆராதனை
நடைபெறும். கோவில் கருவறையில் உள்ள ஸ்தம்பத்திற்கு பூஜைகள் நடத்தப்படும்.
ஆண்டுதோறும் தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று இப்பகுதியில் உள்ள
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து இந்த கோயிலில் உள்ள
பட்டத்துக்காளையை வணங்கி செல்வார்கள், தை மாதம் முதல் தேதி பிறக்கும் கன்று
குட்டிகள் இங்கு தானமாக பொதுமக்களால் வழங்கப்படும். குறிப்பாக நாட்டு மாடு
கன்றுகுட்டிகள் மட்டுமே கோயில் நிர்வாகம் பெற்றுக்கொள்கிறது. பசுக்களைப்
பராமரிக்க இங்கு கோசாலை உள்ளது.பொதுமக்கள் பசுக்களுக்கு கீரைகள்,
புல்கட்டுகளை வrங்கி தருவார்கள்..ஜாதி மத பேதமின்றி அனைத்து ஜாதிகளைச்
சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து பட்டத்தை காளையை வணங்குவது
சிறப்பம்சமாகும். ஒமைக்ரான் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை
பின்பற்றி நேற்று கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. 50 ஆண்டுகளில் தை
மாதம் கோயில் அடைக்கப்பட்டது இதுவே முதன்முறை என்று பொதுமக்கள் புலம்பி
செல்கின்றனர். கோயில் வாசலில் சூடம் ஏற்றி வாசலில் இருந்தே காளையை வணங்கி
செல்கின்றனர். இருந்தபோதும் அதிகாலையில் கோவிலில் ஸ்தம்பத்திற்கும் |
பட்டத்துக்காளைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.