சரவணம்பட்டி: சிரவணபுரம் தண்டபாணி கடவுள் கோவிலின் இன்று தைப்பூச திருவிழா துவங்குகிறது. ஜன.18ல் நிறைவு பெறுகிறது. கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு விநாயகர் வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜன.16ல், காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருவீதி உலா நடக்கிறது. ஜன.17ல், குமரகுருபர கடவுள் திருக்கல்யாணம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஜன.18ல், காவடி பூசை, முலவர் திருமஞ்சனம், கடந்தர் அனுபூதி நுால் வெளியீடு நடக்கிறது. மாலையில் திருத்தேர் நிகழ்வுடன் தைப்பூச தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.