சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வது சிறப்பானது. பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யம். தேவாரத்திலுள்ள நமசிவாய பதிகத்தில் திருநாவுக்கரசர், ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்று குறிப்பிடுகிறார். சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வது பசுவுக்கு கிடைத்த பெருமை என்பது இதன் பொருள்.