லட்சுமி வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. அவை சுமங்கலியின் நெற்றி வகிடு, மலர்ந்த தாமரையின் உள்பாகம், யானையின் தலை, வில்வ இலையின் பின்புறம், பசுவின் பிருஷ்டம் (பின்புறம்) ஆகியவை. இவற்றுக்கு லட்சுமி நிவாஸம் (லட்சுமி தங்குமிடம்) என்று பெயர். இவற்றில் கோமியமும், சாணமும் வெளிப்படும் பின்பாகத்தில் லட்சுமி இருக்கிறாள். பசுவின் உடம்பில் எந்த பாகமும் தாழ்வானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது. செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி வாசம் செய்வதால் பசுவின் பின்புறத்தில் சந்தனம், குங்குமம் இட்டு அர்ச்சனை செய்வர்.